Categories
உலக செய்திகள்

பதுங்கி இருந்த ஐஎஸ் இயக்கத் தலைவர்…. சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்…!!

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் இயக்கத்தலைவர் கடும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி  ஐ.எஸ். பயங்கரவாதிகளும் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் அப்பாவி பொதுமக்களை குறி பார்த்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்ற மார்ச் மாதம் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலத்தினுள் நுழைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நங்கார்ஹர் மாகாணத்திலுள்ள ஜலாலாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினுடைய மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் அசாத்துல்லா ஓராக்சாய் இப்போது பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற ராணுவ வீரர்கள் அசாத்துல்லா ஓராக்சாய் பதுங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பலியான இந்த அசாத்துல்லா ஓராக்சாய் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் உளவு துறை அதிகாரியாக இருந்து, நாட்டில் நடந்த பல கொடூர தாக்குதல்களுக்கு பெரும் காரணமாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |