கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது இதில் 6 பேர் உயிரிழந்த்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.