Categories
மாநில செய்திகள்

“பத்தல, பத்தல” முழு அதிகாரத்தையும் கையில் எடுங்க…. அண்ணாமலை திடீர் அதிரடி….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவர் ஆன்மீகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 வருடங்களாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி கேட்கிறார்கள். சனாதன தர்மத்திற்கு அழிவே கிடையாது. கடந்த 20 வருடங்களாக சனாதன தர்மம் குறித்து பொய்யான கருத்துகளை கூறி வருகிறார்கள்.

எந்த காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவு என்பதே கிடையாது. சனாதன தர்மம் 5,000 வருடங்களாக இருக்கிறது. இதை 20 வருடங்களாக தமிழகத்தில் எதிர்க்கத் தொடங்கியுள்ளார்கள். பிரதமர் மோடி சனாதனத்தை காப்பாற்றக் கூடியவர் தான் நாட்டின் காவலனாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். என்னால் சிவனடியார்கள் போல் இருக்க முடியவில்லை. ஒரு கன்னத்தை அறைந்தால் மற்றொரு கன்னத்தை என்னால் காட்ட முடியாது. நான் சத்ரியனாக இருக்கிறேன் என்றார். இதனையடுத்து அண்ணாமலை திருப்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரபு வீட்டிற்கு சென்றார்.

அங்கு பிரபு வீட்டில் கல் வீச்சு  தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகம் அமைதி பூங்காவாக மாற காவல்துறையினர் முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். தமிழக காவல்துறையினர் தங்களுடைய வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அடுத்த குற்றம் நடைபெறாமல் தடுக்க முடியும். மேலும் செய்தியாளர் ஒருவர் செப்டம்பர் 26-ஆம் தேதி போராட்டம் நடைபெறுமா என்று கேட்டதற்கு, அதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக நடைபெறும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

Categories

Tech |