Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் புதிய சிக்கல்…. பீதியில் சார் பதிவாளர்கள்….!!!!

பத்திரப்பதிவின் போது கட்டிடங்கள் இருப்பது மறைக்கப்படுவதால் சார் பதிவாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பத்திரப்பதிவு முறைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் தங்களின் முழு விபரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதில் சொத்து வாங்குபவர்கள் குறிப்பிடும் தகவல்களின் அடிப்படையிலேயே பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவின்போது கட்டிடங்கள் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தால் கட்டிடகள ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பல பத்திரங்கள் காலிப்பணியிடங்கள் என்று கூறி பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பத்திரப்பதிவுக்கு பின் அங்கு கட்டடங்கள் இருப்பது தெரிய வருவதால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனனில்  கட்டடங்கள் இருப்பது தெரியாவிட்டால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட நேரிடும். இதனால் சார்பதிவாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். அதாவது பத்திரப்பதிவின் முதல் கட்டத்தில் கட்டிடங்கள் இருப்பது தெரியவராது. ஆனால் பத்திரப்பதிவு செய்யும் பொது கட்டிடங்கள் இருப்பது தெரியவந்தால், அதற்கு பணம் வசூலிக்கப்படும். ஆனால் பத்திர பதிவிற்கு பின் கட்டிடங்கள் இருப்பது தெரிய வந்தால், அதற்கு சார்பதிவாளர்களே  பொறுப்பாளர்கள் ஆவார். இந்த பத்திரப்பதிவின்போது சார்பதிவாளர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என பதிவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு பதிவுத்துறை ஏற்படுத்த வேண்டும் என சார்பதிவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |