Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5000ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட, கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது அந்த இழப்பீட்டு தொகையை முதல்வர் மு.க ஸ்டாலின் 10 லட்சமாக உயர்த்தி உள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊக்கத்தொகையை ரூ.3000 இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |