Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் நல வாரியம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பத்திரிக்கையாளர்களை நலனை பாதுகாக்க பத்திரிக்கையாளர்கள் நலவாரியம் அமைத்து அதற்காக இரண்டு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக செயல்படுத்துவது, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திட பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் தலைமையில் ஆறு பேர் என்ற குழு அமைக்கப்படும்.

பத்திரிக்கையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி, ஆதரவு, அரசு விளம்பரங்கள் வெளியிடும் பத்திரிக்கை நிறுவனங்கள், அரசால் வழங்கப்படும் விளம்பர கட்டணத்தில் ஒரு சதவீதம் தொகையை நல வாரியத்திற்கு வழங்க வேண்டும். நலவாரிய திற்காக ஒரு நிர்வாக அலுவலர், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |