இளைஞர் ஒருவர் பத்திரிக்கை அலுவலகம் முன்பு தீவிரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிசில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தாக்குதலில் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் சாஹீர் ஹஸன் முஹம்மது (25) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் மீது தீவிரவாத தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உள்ளூர் நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, சாஹிர் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அவர்கள் 4 பேருக்கும் முன்பே தெரியும், மேலும் அவர்கள் தான் சாஹீரை தாக்குதல் நடத்த தூண்டியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.