சிம்புவின் பத்துதல படத்திற்காக தயாராகி வருவதாக டிஜே அருணாச்சலம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.
All set for #PathuThala
excited to work with an amazing team. @nameis_krishna @StudioGreen2 @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman pic.twitter.com/E6aAGlCkFS— TeeJay Arunasalam (@Iamteejaymelody) August 18, 2021
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் டிஜே அருணாச்சலம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘பத்து தல’ படப்பிடிப்பிற்காக தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். டிஜே அருணாச்சலம் ‘அசுரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.