‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக கௌதம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
A New Beginning,
The start of a journey that I've spent a long time waiting for. #Day1#PathuThala pic.twitter.com/4bbk9wAoO2— Gautham Karthik (@Gautham_Karthik) August 26, 2021
இதுதவிர சிம்பு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று பத்து தல படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கௌதம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.