விபத்து ஏற்படுத்தி பத்து பேர் உயிர் போகக் காரணமாக இருந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இல்லையா என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறது
கனடா நகரில் 2018 ஆம் வருடம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற ரொரன்ட்ரோ பாதசாரிகள் கூட்டத்தில் அலெக் மின்னாசியன் என்பவர் வேனைக்கொண்டு மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தால் 16 பேர் படுகாயம் அடைந்ததைத்தொடர்ந்து 10 பேர் மரணமடைந்தனர்.
இவர் மீது 10 கொலை வழக்குகள் மற்றும் 16 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொலை குற்றவாளியான மின்னாசியன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மின்னாசியனை மனநல மருத்துவர்கள் பரிசோதித்து பார்க்க உத்தரவிடப்பட்டது.
அதில் அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் பலரும், அவரால் பிற மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது மேலும் தன் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரியாது என்றே தெரிவித்தனர். எனவே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பொறுப்பல்ல என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஸ்காட்வூட்ஸ்சயிட் என்ற மருத்துவர் மட்டும், “மின்னாசியன் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தே தான் செய்துள்ளார். அவர் செய்த குற்றங்களுக்கு அவரே முழு காரணம்” என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்த மருத்துவர்களால் குழப்பமடைந்த நீதிமன்றம் டாக்டர் ஸ்காட்வூட்ஸ்சயிட்டை விசாரிக்க முடிவெடுத்துள்ளது.