Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

சிறுத்தை, வீரம், விசுவாசம், அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா, பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்க இருக்கின்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் சூர்யா இந்தப் படத்தில் ஐந்து கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அண்மையில் வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் எனும் பெயர்கள் இடம்பெற்று இருந்தது இந்த பெயர்களை தான் சூர்யா நடிக்கும் ஐந்து கதாபாத்திரங்களின் பெயர்கள் என கூறப்படுகின்றது. மேலும் இதனை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |