Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து வருடம் கழித்து நேர்காணல்… உற்சாகத்தில் ரசிகர்கள்…. காரணம் இதுதானா…?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பூஜாவுக்கு செல்வராகவன் போன்ற பலர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. படு மாஸ் ஆன இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் ட்ரைலரை பார்த்த சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் மிகப் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

அவர்களை குஷிப்படுத்தும் வகையில் பல வருடங்கள் கழித்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். விஜய் கடைசியாக 2012 ஆம் ஆண்டு சன் டிவி நேர்காணல் பங்கேற்றிருக்கிறார். இதற்கான  ப்ரோமோ நேற்று வெளியாகியுள்ளது. நெல்சன் விஜய்யை கேள்வி கேட்க விஜய் பதிலளிக்கிறார். ப்ரோமோ  மிகவும் கலகலப்பாக இருக்க இந்த நேர்காணலை ரசிகர்கள் காண ஆவலுடன் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பத்து வருடங்கள் கழித்து விஜய் நேர்காணலில் கலந்து கொள்ள காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு காரணமான சிலர் கூறுவது என்னவென்றால் பொதுவான விஜய் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறும். ஆனால் பீஸ்ட் படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் இந்த நேர்காணலில் பங்கேற்று உள்ளதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Categories

Tech |