கேரள பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளிக்கின்றது.
பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது. இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக கோவிலில் மன்னர் குடும்பத்திற்கு கூடிய உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதை தவிர நிர்வாகம் பொருத்தவரை உச்சநீதிமன்றம் ஏற்கனவே அமைப்பதாக சொல்லி இருந்த இடைக்கால குழு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் இந்த குழு இயங்கும் என்றும், அந்த குழுவில் 5 பேர் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றபடி அந்த ஆறாவது அறையை திறப்பது சம்பந்தமான தீர்ப்புகள் இந்த வாசிப்பின் போது கொடுக்கப்படவில்லை. ஒருவேளை அது தீர்ப்பின் முழு விவரங்களை தெரியவரலாம் இல்லையென்றால் மன்னர் குடும்பமே அது சம்பந்தமான முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.