புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3-ம் தேதி திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையில் வரும் 3-ம் தேதி திறக்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் கடந்த மார்ச் மாதம் மூன்று மாதங்களாக மூடப்பட்ட நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையை மூடப்பட்டது. தற்போது பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட உள்ளதாக வெளியாகி உள்ள அறிவிப்பு அந்தப் பகுதி வியாபாரிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.