பெண்கள் உரிமை செயல்பாட்டாளரும், பத்மபூஷன் பெற்ற வருமான எலா பாட் நேற்று காலமானார். இவருக்கு வயது 89.காந்தியவாதியாக அறியப்பட்ட இவர் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக பல வழக்குகளையும் நடத்தியுள்ளார். அதே சமயம் சேவா அமைப்பை தொடங்கி தலைமை தாங்கியவர். பெண்களின் முதல் வங்கியான சேவா கூட்டுறவு வங்கியை கடந்த 1973 ஆம் ஆண்டு இவர்தான் தொடங்கி வைத்தார்.
இவருக்கு இந்திய அரசு 1985 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 1986 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது. இதனிடையே வயது மூப்பு காரணமாக இவர் நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.