Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பத்மஸ்ரீ விருதை வாங்குங்க… தேச துரோக வழக்கில் கைது செய்யுங்க… நடிகை கங்கனாவுக்கு எதிராக கண்டனம்!!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் எனவும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும், பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாட்டின் சுதந்திரம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அதற்கு கண்டனமும் வலுத்து வருகிறது. டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு உண்மையிலேயே 2014-ஆம் ஆண்டு தான் சுதந்திரம் அடைந்தது. 1947-ஆம் ஆண்டு கிடைத்தது சுதந்திரம் அல்ல அது பிச்சை. பிச்சையாக கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா என பேசி இருந்தார்.

அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வருண் காந்தி, கங்கனாவின் கருத்து தேசத் துரோக செயல் எனவும், சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை இப்படி இழிவு படுத்த கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று கங்கனாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன் எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும் அதன் ஹீரோக்களையும் அவ மதிக்காத வகையில் மன உளவியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கங்கனா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

Categories

Tech |