Categories
ஆன்மிகம்

பத்மாவதி தாயார் கோவிலுக்கு…. தங்க பாதம் நன்கொடை…. விலை எவ்வளோ தெரியுமா….?

பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க பாதங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

திருப்பதியில் அமைந்துள்ள திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த சத்ய நாராயணா என்ற பக்தர் தன்னுடைய வேண்டுதலின்படி தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். இந்த கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின் போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சுவாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாதத்தின் மொத்த எடை 85 கிராம் ஆகும். இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என சத்திய நாராயணா கூறியுள்ளார். இந்த தங்கப் பாதங்களை அர்ச்சகர் பாபு சுவாமி, கோவிலின் அதிகாரி பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் விசேஷகிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Categories

Tech |