இந்திய அரசு பெரிய சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. இது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அவருடைய சாதனை போன்ற விவரங்களை சுருக்கமாக இதற்கென்று தொடங்கப்பட்டுள்ள வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் ,செப்டம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் கூறியுள்ளது.