முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் உறவினரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பந்தய புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ரஞ்சித்திற்கும், சதீஷிற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சித் தனது நண்பரான ஹரிஹரன் என்பவருடன் இணைந்து சதீஷை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனால் படுகாயமடைந்த சதீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஹரிஹரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.