Categories
தேசிய செய்திகள்

பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடா  ரயில்வே நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் ஒன்று உள்ளது. அந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்தது. அதனை கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என்று நினைத்து கையில் எடுத்து விளையாடினான். அந்த சமயத்தில் பந்து திடீரென வெடித்து சிதறியது.

அந்த விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வெடிகுண்டு ரயிலுக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Categories

Tech |