Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்து வீச அதிக நேரம் எடுத்ததால்…. கேஎல் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…!!!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. லக்னோ அணியின் கேப்டன் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அதே நேரத்தில் நடப்பு தொடரில் மும்பை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் கே எல் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் டெல்லி அணி கேப்டனுக்கு ஒரு முறையும் மும்பை அணி கேப்டன்ரோகித் சர்மாவிற்கு 2 முறையும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |