Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பனங்காட்டீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி”… திரளான மக்கள் சாமி தரிசனம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனங்காட்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்து இருக்கும் பழைய புரத்தில் உள்ள சத்தியாம்பிகை உடனுறை நேத்ரானேஸ்வரர் என்கிற பனங்காட்டீஸ்வரர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து 6:10 மணியளவில் கோவில் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டது.

இதைத் தொடர்ந்து 6.22 மணியளவில் சத்யாம்பிகை சன்னதியில் உள்ள சாமி மீது சூரிய ஒளி பட்டது. இதன்பிறகு அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். சாமி சிலைகள் மீது சூரிய ஒளி விழும் அதிசயமானது சித்திரை ஒன்று தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும் என கோயில் பூசாரி கூறியுள்ளார்.

Categories

Tech |