சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் உயர்ந்து நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகினால் வேறொரு ஆபத்தும் ஏற்படக்கூடும். அதாவது பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பாக எச்சரித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகி உண்டாகும் புதிய நுண்ணுயிரிகளால் புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பனிப்பாறைகள் உருகி உருவாகும் கரியமிலவாயு சுற்றுச் சூழலில் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.