Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பனியால இதோட சாகுபடி போச்சு..! விலையும் அதிரடி வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டதாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த உள்ள பல்வேறு கிராமங்களில் முல்லைப்பூ 1000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை ஆண்டுதோறும் முல்லைப்பூ சீசன் காலமாகும். நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் சீசன் காலத்தில் முல்லைப்பூ பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பனிப்பொழிவால் இலைகள், பூச்செடிகள் உதிர்ந்து வேதாரண்யம் பகுதியில் பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பூ நாளொன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சீசன் இல்லாத காலத்தில் ரூ.1000 வரை முல்லை பூ விற்பனையாகிறது. தற்போது ரூ.700 முதல் 1000 வரை விற்பனையானது. முல்லைப்பூ பனிப்பொழிவால் அதிகம் விளையாததால் விலை உயர்ந்துள்ளது.

மேலும் திருவிழாக்களுக்கு கொரோனா காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு, ஆயுதபூஜை ஆகிய நாட்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்கும். அரசு தடை விதித்ததால் தற்போது திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதனால் முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.300 முதல் 400 வரை விற்பனையாகிறது. ரூ. 1000 முதல் 2000 வரை திருவிழாக்காலங்களில் விற்பனையாகும். விலை வீழ்ச்சி அடைந்ததாலும், பூ விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகள் மூலம் கடன் உதவியும் அளிக்க வேண்டும் என்று வேதாரண்யம் வணிகர் சங்கத் தலைவர் திருமலை செந்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |