Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பனி வரகு காளான் சாதம்…அற்புதமான சுவையில்…!!

பனி வரகு காளான் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

பனிவரகு அரிசி                                     –  1 கப்
நறுக்கிய காளான்                                – 1/2 கப்
கடலை எண்ணெய்                              -3 மேஜைக்கரண்டி
ஏலக்காய்                                                   -2
பட்டை                                                         – சிறிது
கிராம்பு                                                       – 2
பட்டை சோம்பு (பொடித்தது)          – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது                           -1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள்                                           -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                                              – சிறிது
வெங்காயம்                                               – கால் கப்
தக்காளி                                                       – கால் கப்
புதினா                                                          – ஒரு கைப்பிடி
தேங்காய் பால்                                         – கால் கப்
உப்பு                                                               – தேவையான  அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், 2 கிராம்பு, சோம்பு, இஞ்சிப்பூண்டு விழுது முறையே சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேலும் அதனுடன் புதினா, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சிறிதளவு, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.

கடாயில் கழுவிய காளான் 1/2 கப், கல்லில்லாத  பனி வரகு அரிசி1 கப்,  தண்ணீர் 2 கப், சிரிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீரும், அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது, தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் புதுவிதமான சுவையில் பணி வரகு காளான் சாதம் ரெடி.

Categories

Tech |