Categories
மாநில செய்திகள்

பனைத் தொழிலாளர்கள் ஹேப்பி…. பட்ஜெட்டில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

பனை தொழிலாளர்களுக்காக சிறப்பு அறிவிப்புகள் தமிழக வேளாண் பட்ஜெட்டில்  வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி பனை மரங்கள் இருக்கிறது. இதில் 3 லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார்  போன்றவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு இழுத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நுங்கு, பதநீர் இறக்குதல் மூலம் பனைமரங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 11,000 பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் சாகுபடியை ஊக்குவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு வேளான் பட்ஜெட்ல்  பண்ணை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது.

தற்போது இத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 2022 -23 ஆண்டில் 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க பணை இயந்திரங்கள், பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைக்கப்படும் எனவும் இத்தொழிலுக்கான உபகரணங்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பனை வெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கி, உற்பத்தி செய்யப்படும் பனை ஓலைப் பொருட்கள் மாநில, மாவட்ட சங்கங்களால் வாங்கப்பட்டு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இத்திட்டம், ரூ.2.65 கோடி செலவில் செயல்படுத்தப்படும். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும். மேலும், 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |