பட்டர் பன்னீர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் – 150 கிராம்
வெண்ணை – 3 ஸ்பூன்
ரீபைண்டு ஆயில் – 4 ஸ்பூன்
பால் – ஒரு கப்
தக்காளி – 3
வெங்காயம் – 2 நறுக்கியது
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சிப்பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெங்காயம், தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். பின்பு இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனை தொடர்ந்து மிளகாய்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லியும் போட்டு வதக்கி இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் 100 கிராம் வெண்ணெய் சேர்த்து, ஒரு கப் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கரண்டியால் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
அதனுடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள மசாலாவை போட்டு குறைவான தீயில் வைத்து கிண்டி நன்கு கலந்ததும் இறக்கும் தருணத்தில் பன்னீரை சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும். இப்போது பட்டர் பன்னீர் மசாலா ரெடி.