Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பன்னீர் பட்டர் மசாலா வேண்டும்” கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய பெருங்களத்தூர் பாரதி நகரில் கோவர்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரயில்வே துறையில் ஊழியராக வேலை பார்க்கும் வசுந்தரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகளான ஷீனாகிராஸ் என்பவர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஹீனா கிராஸ் தனது தாயாரிடம் பன்னீர் பட்டர் மசாலா வேண்டும் என கேட்டுள்ளார். மகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வசுந்தரா அதனை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கோபத்தில் இருந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |