தேவையானவை : பால் -அரை லிட்டர் பாதாம் -5(நறுக்கவும் ) முந்திரி பருப்பு -5(நறுக்கவும் )
உலர் திராட்சை -10 பன்னீர் -100கிராம் (துருவவும் ) ஏலக்காய்த்தூள் -கால் டீஸ்பூன் சர்க்கரை -தேவைக்கு குங்கும பூ -சிறிதளவு கண்டென்ஸ்டு மில்க் -கால் கப் நெய் -சிறிதளவு செய்முறை ; வானலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம் ,முந்திரி பருப்பு ,உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும் .அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும் .கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும்வரை மீண்டும் கொதிக்கவைத்து கொள்ளவும் .பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க் ,பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும் .கொதிக்கத்தொடங்கியதும் ஏலக்காய்த்தூள் ,சர்க்கரை ,குங்கும பூ ,ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும் .இறுதியாக முந்திரி பருப்பு ,பாதாம் சேர்த்து இறக்கவும் .ருசியான பன்னீர் பாயாசம் தயார் ..