மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெ.., நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் கருப்புச்சட்டையுடன் இபிஎஸ் மற்றும் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இபிஎஸ் மூன்று முறை கையெடுத்து கும்பிட்டு “பன்னீர் ரோஜா” இல்லாத மலர்வளையத்தை வைத்து வணங்கினார். அவரை தொடர்ந்து மற்றவர்களும் அஞ்சலி செலுத்தினர்.