சினிமாவில் நடிகர், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று சிறப்பாக நடிப்பவர் நாசர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாசர் வளர்த்துவிட்ட 3 நடிகர்களும் அவர் பெயரைக் காப்பாற்றும் அளவிற்கு தற்போது சினிமாவில் வளர்ந்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளனர். அதாவது நடிகர் நாசர் கூத்து பட்டறைக்கு சென்று நடிகர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பாராம்.
இந்த விஷயங்களை நடிகர்கள் தங்களுடைய மனதில் பதித்துக் கொண்டு அதன்படி பின்பற்றுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெயில், குசேலன், அசுரன், விருமாண்டி, கருப்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்த பசுபதி நாசர் வளர்த்து விட்ட ஒரு நடிகர்தான்.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் திரைக்கதை, எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட இளங்கோ குமாரவேல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பயணம், வாகை சூடவா மற்றும் அபியும் நானும் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரையும் நடிகர் நாசர் தான் தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ஜெயப்பிரகாஷ் பசங்க, மங்காத்தா, ரௌத்திரம், நான் மகான் அல்ல, வம்சம் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடிக்கும். இவருக்கும் நடிகர் நாசர் தான் குரு. மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் நாசர் வளர்த்து விட்ட 3 நடிகர்களுமே அவரின் பெயரை காப்பாற்றும் அளவுக்கு தற்போது வளர்ந்து கற்றுக் கொடுத்த நடிப்பு என்றுமே வீண் போகாது என்று அளவுக்கு நாசரின் பெயரை காப்பாற்றியுள்ளனர்.