பல்வேறு யூடியூப் சேனல்கள் வாயிலாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
தற்போது பப்ஜி மதன் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கிய சிறை மருத்துவர் நவீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புகாரின் பேரில் சிறை மருத்துவர் நவீனை மானாமதுரைக்கு மாற்றி சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பப்ஜி மதன் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கிய சிறை மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.