Categories
மாநில செய்திகள்

“பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்கமுடியாது”….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பப்ஜி மதன் ஜாமீன் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பப்ஜி மதன் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்கள் சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து ஜாமீன் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Categories

Tech |