Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதனுக்கு ஜூலை-7 வரை சிறை…. அதிரடி உத்தரவு…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பணத்தை பறிகொடுத்தவர்கள்  [email protected] என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், மதன் மீது பணம் கொடுத்து ஏமாந்ததாக 100-க்கும் மேற்பட்டவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பப்ஜி மதனை ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. 2 நாள் போலீஸ் காவல் முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது மத்திய குற்றப்பிரிவு. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சைதாப்பேட்டை சிறைச்சாலையில் மதன் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |