Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதன் மனைவிக்கு ஜாமின்… சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பப்ஜி மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம் ஐ முறைகேடாக விளையாடியதற்கும், ஆபாசமாக பேசி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட காரணத்திற்காக பப்ஜி மதனை காவல்துறையினர் பலகட்ட தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா உடன் சேர்த்து 8 மாத குழந்தையும் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பப்ஜி மதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமின் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரது மனைவி கிருத்திகா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. கிருத்திகா உடன் அவரது 8 மாத குழந்தை சிறையில் இருந்த காரணத்தினால் அவருக்கு ஜாமின் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |