Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பப்ஜி மோகம்” தடை பண்ணிட்டாங்க….. விளையாட முடியல….. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!!

பப்ஜி கேமுக்கு  அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியை பேருந்த பள்ளிச் சிறுவன் அருண். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அருண் ஊரடங்கு நாட்களில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடி அடிமையாக இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் பப்ஜி கேம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இதனால் கேம் விளையாட முடியாத அருண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அருணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநல சிகிச்சை கொடுத்துள்ளனர்.

ஆனாலும் பப்ஜி கேமில் இருந்து தன்னை விடுவித்து வரமுடியாத அருண் அவர்களது பண்ணை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஆவடியை சேர்ந்த சிறுவன் இதேபோன்று தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |