ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் பஜ்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி, தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக விளையாடி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினமும் பப்ஜி விளையாடியுள்ளனர். அதில் அந்த மாணவன் தோல்வியடைந்துள்ளார். அதனால் சக மாணவர்கள் அவனை கேலி செய்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
அந்த மாணவனின் தந்தை காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி தினம்தோறும் மரணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வகையில் 16 வயது பள்ளி மாணவன் பப்ஜி விளையாட்டால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.