பப்ஜி விளையாட 10,000 ரூபாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து 17 வயது சிறுவன் தனது தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ரூபாய் 10 ஆயிரம் வேண்டும் என்று தனது தாயிடம் சிறுவன் ஒருவன் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து உறங்கிக்கொண்டிருந்த தாயை சுட்டுக் கொன்றுள்ளார். தாய் மட்டுமல்லாமல் தனது 10 வயது சகோதரியையும் சுற்று கொன்றுவிடுவேன் என்று மிரட்டி தாயை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார்.
தாயின் உடலை இழுத்து சென்று ஒரு அறையில் வெப்பநிலை மிக குறைவாக வைத்து விட்டு 48 மணி நேரம் தாயின் உடலை வைத்துள்ளார். தனது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுத்து பார்ட்டி வைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளியில் வந்தது. இந்த சிறுவனின் தந்தை மேற்கு வங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அவரின் வீட்டில் பப்ஜி விளையாட பணம் தர மறுத்ததால் தாயை சுட்டுக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு ஆய்வில் சிறுவன் தாய்க்கு மிக அருகே நின்று கொண்டு நெற்றியில் சுட்டி இருப்பதாக கூறப்படுகிறது.