தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கின்ற நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகராக திகழும் கிம்பேவை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.அது ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது.மேலும் பூமிக்கு அடியில் 59.34 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. கிம்பே நகரம் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றி இருந்த பல்வேறு நகரங்களிலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்,வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் பயங்கரமாக அதிர்ந்தன. அதனால் பீதியடைந்த மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.