Categories
தேசிய செய்திகள்

“பம்பர் லாட்டரியில் 25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுனர்” நிம்மதியும், மகிழ்ச்சியும் பறிபோய் விட்டதாக வேதனை‌….!!!!

கேரள மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநரான அனூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏராளமான கடன் இருந்ததால் சமையல் வேலைக்கு மலேசியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அதோடு வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் தொகைக்காகவும் விண்ணப்பித்திருந்தார். இந்த கடன் தொகையை வழங்குவதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரியில் அவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அனூப் தன்னுடைய மனைவியுடன் லாட்டரி ஏஜென்சி இருக்கும் இடத்திற்கு சென்றார்.

அங்கு வரி போக ரூபாய் 15 கோடி வழங்கப்பட்டது.  இந்த பணத்தை வைத்து அனூப் முதலில் வீடு கட்டுவதாகவும், அதன் பின் தன்னுடைய கடன்களை அடைத்து விட்டு மீதம் இருக்கும் பணத்தில் உறவினர்களுக்கு உதவி செய்வதாகவும் கூறினார். ஆனால் தற்போது  லாட்டரியில் குறைவான தொகையே பரிசாக விழுந்திருக்கலாம் என்று அனூப் மிகவும் வருத்தத்துடன் கூறுகிறார். அதாவது அவருக்கு லாட்டரி கிடைத்த முதல் 2 நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

ஆனால் 3-வது நாளிலிருந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் முதல் உறவினர்கள் வரை கடன் கேட்டு அனூப்பை அணுக ஆரம்பித்தனர். அதோடு அனூப் வெளியே சென்றால் கூட யாராவது ஒருவர் ஓடி வந்து உதவி என்று கேட்கிறாராம். இதுவரை தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பணம் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் அனூப்  கூறி வருகிறார்.

இதனையடுத்து அனூப் வீட்டை சுற்றி எப்போதும் கூட்டமாக இருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அனூப் மீது மிகவும் கோபத்தில் இருக்கிறார்களாம். இதன் காரணமாக அனூப் இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து சென்று விட்டார். மேலும் அனூப் தனக்கு பணம் கிடைக்கும் முன்பு வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், பணம் கிடைத்த பிறகு அந்த மகிழ்ச்சி பறிபோய்விட்டதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |