Categories
சினிமா தமிழ் சினிமா

‘பம்பாய்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பம்பாய் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பம்பாய். இந்த படத்தில் அரவிந்த்சாமி-மனிஷா கொய்ராலா இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக  நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

 

Uyire Uyire Song Lyrics - Bombay Tamil Movie

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பம்பாய் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் விக்ரம் தான். அந்த நேரத்தில் புதியமன்னர்கள் படத்தில் நடித்து வந்த விக்ரம் அந்த படத்திற்காக தாடி வளர்த்திருந்தார். பம்பாய் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் தாடியை நீக்க வேண்டும் என்பதற்காக விக்ரம் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |