திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் பல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய கரு.பழனியப்பன் திருமாவளவனின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை பாஜக ஏன் கொண்டாடவில்லை?.. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியாச்சு.. ஆட்சிப் பணி நியமனமும் கொடுத்தாச்சு…
ஆனால் எச்.ராஜா இதனை வரவேற்கவில்லை அவர்தான் இந்துக்களே ஒன்று கூடுங்க… ஒன்று கூடுங்கள்…. என்று சண்டை போட கூப்பிட்டாரு. இப்போ இந்துக்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆயிட்டாங்க. இதனை அவர் பாராட்டி இருக்கணும் இல்லையா. ஆனா ஒருத்தன் கூட பாராட்ட மாட்டேங்குறான். பம்முறான்…. ஏன்னா அவனெல்லாம் இந்துக்களை அடிமையாக்கவே கூப்பிட்டுருக்கான். நான் மேலே இருக்கேன். நீங்க எல்லாம் அடியாளா இருக்குடான்னு கூப்பிட்ருக்கான். ஆனா நான் அர்ச்சகரா வரேன் என்று சொன்னால் விடவே மாட்டேங்குறான். இதுதான் பெரியார் கண்ட கனவு. வீரமணி, கலைஞர், திருமாவளவன் கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.