மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கன்னங்குளம் பகுதியில் முருகன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நாகமல் என்பவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் மன்னார்புரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். நாமகலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.