மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிராமத்தில் கென்னடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி ஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் மயிலாடி புதூர் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஆண்டனி ஜோவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்டனி ஜோ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.