மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இல்லம் வடக்கு தெருவில் மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புன்னையாபுரம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.