Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி அடுத்துள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியில் சக்திவேல்(20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த லோகநாதன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஜமீன் இளம்பள்ளி உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சுவற்றில் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகநாதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |