தனியார் கல்லூரி வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பிச்சை பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தவமணி(81) என்ற மனைவி இருந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிச்சைபால் இறந்துவிட்டதால் தவமணி தனது தம்பியான இஸ்ரவேல் என்பவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பியை தவமணி கரையான்குழிக்கு சென்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் நால்கால்மடம் பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வேகமாக வந்த தனியார் கல்லூரி வாகனம் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கருத்த பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.