Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போரடிய வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

லாரி மீது கார் மோதி சாலையில் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி பகுதியில் சூரியா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குமாரபாளையம் வட்டமலை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை சூர்யா முந்த முயன்றுள்ளார்.

அப்போது லாரியின் மீது கார் மோதி சாலையின் மறுபக்கம் கார் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சூர்யா மற்றும் விக்னேஷ் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா உயிரிழந்த நிலையில், தற்போது விக்னேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் காவல்துறையினர் சூர்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |