Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போராடிய மேலாளர்…. கார் டிரைவருக்கு வலைவீச்சு….!!

ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பஸ் கம்பெனி மேலாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் நத்தமேடு பகுதியில் வசித்து வந்த பெரியசாமி என்பவர் நாமக்கல்லில் தனியார் பேருந்து கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல பெரியசாமி ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெருமாள் கோவில் மேடு ஆகே சென்றபோது பின்னல் வந்துகொண்டிருந்த கார் திடீரென ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இந்த கோரவிபத்தில் படுகாயமடைத்து உயிருக்கு போராடிய பெரியசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேகமாக நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |